2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்த சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதை அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஒஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எஃப்.பி.ஐ மற்றும் இலங்கை காவல்துறையினர் நடத்திய விசாரணைகள் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார்.
இஸ்லாமிய அரசின் (ஐ.எஸ்.ஐ.எஸ்) சித்தாந்தங்களை இலங்கைக்கு நௌபர் மௌலவி அறிமுகப்படுத்தியதாகவும், 2016 இல் ஈஸ்டர் தாக்குதல்களின் தலைவரான சஹ்ரான் ஹாஷிம் இந்த தரப்புடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தங்கள் குறித்த விரிவுரைகளை நௌபர் மௌலவி நடத்தியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது, இதுபோன்ற உள்ளடக்கங்கள் அவரது மடிக்கணினிகளில் இருந்து மீட்கப்பட்டு, அவரிடம் இருந்து பல்வேறு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நௌபர் மௌலவி நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயிற்சி முகாம்களை நிறுவியிருப்பது கண்டறியப்பட்டதாக அமைச்சர் வீரசேகர தெரிவித்தார்.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக வெளிநாட்டினரின் ஈடுபாடும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான தொடர்புகள் தொடர்பாக கத்தார் நாட்டில் இலங்கை பின்னணியுடைய அவுஸ்திரேலிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார், அதே நேரத்தில் இலங்கை புலனாய்வு சேவை, ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தாவுடனான அவரது தொடர்புகளைக் கண்டறிந்துள்ளது என்று அவர் கூறினார்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிய அமைப்பின் மாணவர் சங்கத்திற்கு நிதியளிப்பதன் மூலம் நான்கு மாலைதீவு பிரஜைகளும் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.
தாக்குதல்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் வீட்டசேகர இந்த அறிக்கையை வெளியிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என நௌபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
ஜமாத்-இ-இஸ்லாமிய உறுப்பினர் அஜ்ஜூர் அக்பர் தாக்குதல்களின் மற்றொரு சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார் என கூறினார்.