கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 11 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்த பிரதேச மக்கள் குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
இதேவேளை குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் குறித்த தீ விபத்தில் வீட்டு பாவனை பொருட்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகியுள்ளது.
தீ விபத்த ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1