இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால், நல்ல தரமான முகக்கவசத்தை அணிவதன் முக்கியத்துவத்தை நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலாவிகே, N95 முகக்கவசங்கள் சிறந்த பாதுகாப்பை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
அறுவைசிகிச்சை முகக்கவசங்கள் சரியான முறையில் அணிந்தால் பாதுகாப்பையும் வழங்கும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க இரட்டை முகக்கவசங்கள் அணிவது சிறந்தது. ஒரு துணி முகக்கவசத்துடன் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அணியலாம் என்றும் தெரிவித்தார்.
வெறும் துணி முகக்கவசத்தை அணிவது பொருத்தமற்றது என்றார்.
சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.எம். ஆர்னோல்ட் தெரிவிக்கையில், முகத்தை முழுமையாக மூடும் முறையே சிறந்தது என்றார்.
யாராவது இரட்டை முகக்கவசத்தை அணிய ஆர்வமாக இருந்தால், முதலில் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அணிய வேண்டும், பின்னர் அதை துணியால் செய்யப்பட்ட முகக்கவசத்தால் மூட வேண்டும்.
இரட்டை முகக்கவசத்தை அணிவது வைரஸ் தொற்றுக்குள்ளாகுவதை தடுக்க உதவும் என்றார்.