25.3 C
Jaffna
December 26, 2024
Pagetamil
உலகம்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு ;மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென பிரிட்டன் பிரதமர் வலியுறுத்தல்!

ஊரடங்கு தளர்வு காலகட்டத்தில் மக்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு இறுதியில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது.

கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்போது இங்கிலாந்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை கிடைப்பதாக பிரிட்டன் மக்கள் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் இந்திய வகை உருமாறிய கொரோனா பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரவிவிட்டது.

ஏற்கெனவே இந்திய வகை உருமாறிய கொரோனா குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் முடிந்த அளவுக்கு வீட்டில் இருந்து கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

நான்கு கட்ட ஊரடங்கு தளர்வில் மூன்றாம் கட்ட தளர்வு அமலுக்கு வந்துள்ளது. இதில், சினிமா தியேட்டர்கள், உணவகங்கள், பப், பெரும்பாலான தொழில்கள் அனைத்தும் இயல்பாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபோக, பயிற்சி வகுப்புகள் மற்றும் உள்ளரங்க விளையாட்டுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

Leave a Comment