திருப்பதியில் ஓராண்டாக பூட்டிக் கிடந்த ஊழியரின் வீடு; இரண்டு ட்ரங் பெட்டிகளில் கட்டுக் கட்டாக பணம் கண்டுபிடிப்பு!

Date:

பூட்டிக் கிடந்த வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோயிலில் 1980ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு நாமம் இட்டு அவர்கள் தரும் அன்பளிப்பில் வாழ்க்கை நடத்தி வந்தவர் எஸ்.ஸ்ரீனிவாஸ். இந்த சூழலில் திருப்பதியில் கோயில் சுற்றுப்புறத்தில் தேவையற்ற மக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் மெகா திட்டம் ஒன்றை தேவஸ்தானம் கொண்டு வந்தது. அதன்படி, பல ஆண்டுகளாக கோயிலுக்கு அருகே வசித்து வருபவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது.

இதன்மூலம் சேஷாசல நகரில் ஸ்ரீனிவாஸிற்கு வீடு ஒன்றை தேவஸ்தானம் ஒதுக்கியது. இங்கு அவர் வ்பல ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்தார். ஸ்ரீனிவாஸ் திருமணம் செய்து கொள்ளாததால் உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. இந்நிலையில் பல நாட்களாக நீடித்து வந்த உடல்நலப் பாதிப்பால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திடீரென உயிரிழந்தார். தனது வீட்டை மீண்டும் தேவஸ்தானத்திற்கே ஒப்படைப்பதாக உயில் எழுதி வைத்துள்ளார்.

அதன்பின்னர் அவரது வீடு பூட்டியே கிடந்தது. இந்த சூழலில் ஸ்ரீனிவாஸின் வீட்டை கைப்பற்றி முறைகேடான வகையில் விற்க சிலர் முயற்சி செய்தனர். இதுபற்றி தகவலறிந்த திருப்பதி தேவஸ்தான வருவாய்த்துறை, கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் ஸ்ரீனிவாஸின் வீட்டிற்கு சென்றனர். நீண்ட நாட்களாக பூட்டியே இருந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு இரண்டு ட்ரங் பெட்டிகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்துள்ளது. சில பத்திரங்களும் இருந்துள்ளன. அதிலிருந்த பணம் ரூ.6 லட்சம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். நாணயங்கள் மட்டும் 25 கிலோவிற்கு இருந்துள்ளன. இதையடுத்து ஸ்ரீனிவாஸின் வீட்டை தேவஸ்தானம் எடுத்துக் கொண்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இறந்தவர் வீட்டில் கட்டுக் கட்டாக இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். சமீபத்தில் புதையல் இருப்பதாக நினைத்துக் கொண்டு திருமலையில் 80 அடி வரை சுரங்கம் தோண்டிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்