திருப்பதி ஏழுமலையான் கோவில் ஊழியர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெட்டி : கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததால் அதிர்ச்சி!

Date:

திருப்பதி மலையில் உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து மறைந்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தேவஸ்தான அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்தவரான சீனிவாசன் என்பவர், திருப்பதி கோவிலில் லட்டு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். கோவிலுக்கு வெளியே நடைபெறும் இறை கைங்கரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் தாமாக முன் சென்று உதவிகளை செய்வது வழக்கம். எனவே திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் அவர் ஏழுமலையான் கோவிலில் வேலை செய்யும் அர்ச்சகர் என்று கருதி வந்தனர்.

குடும்பம், குழந்தைகள் ஏதும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்த சீனிவவாச்சாரிக்கு திருப்பதியில் வீடு ஒன்றை தேவஸ்தானம் வாடகை அடிப்படையில் அனைவருக்கும் வழங்கியது போல் வழங்கியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீனிவாசன் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். எனவே அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை கையகப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் நேற்று சென்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது அங்கு நான்கு இரும்பு பெட்டிகள் உட்பட பல்வேறு பொருட்கள் இருந்தன. இரும்பு பெட்டிகளை திறந்து பார்த்தபோது அவற்றில் கட்டுக்கட்டாக பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகள் என ஏராளமான அளவில் பணம் இருந்தது.

பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வந்த அவற்றை எண்ணிய போது சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பணம் எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்