24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

யாழ் பல்கலைகழகத்தை சூழவும் இராணுவம், பொலிஸ்!

நாளை மே 18 யாழ். பல்கலைக்கழத்தினுள் சில மாணவர்கள் நினைநே;தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால், பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக் கழகத்தைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்று நிலமைகளை அடுத்து, இம் மாதத் தொடக்கத்தில் இருந்து, நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் அத்தியாவசியப் பரீட்சை செயற்பாடுகள், ஆய்வு நடவடிக்கைகள் தவிர மாணவர்கள் உள் நுழைவு தடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

எனினும் பலகலைக்கழகத்தினுள் மாணவர்கள் சிலர் நாளை 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை செய்வதற்குத் தயாராகி உள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதனால், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்;, பல்கலைக்கழகத்தைச் சுற்றி இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர கண்காணிப்பை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

east tamil

ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க – இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

east tamil

யாழில் பேருந்து மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment