சீனாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சூறாவளி தாக்குதலால் 12 பேர் உயிரிழப்பு ; 400க்கும் அதிகமானோர் படுகாயம்!

Date:

சீனாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். சீனாவின் கிழக்கே ஜியாங்சு மாகாணத்தில் சுஜோ நகரில் ஷெங்ஜே பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் சூறாவளி வீசியது. இதன் பாதிப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.

149 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உகான் நகரில் 2 மாவட்டங்களின் வழியே மற்றொரு சூறாவளியானது கடந்து சென்றது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு 8 பேர் உயிரிழந்தனர். 280 பேர் காயமடைந்தனர்.

சூறாவளியால் உகான் நகரில் 27 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுதவிர 130 வீடுகள் சேதமடைந்தன. கட்டிட பணி நடந்து வந்த இடத்தில் உள்ள கூடாரங்கள், 2 கிரேன்களும் சேதமடைந்தன. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. இந்த சூறாவளியானது மணிக்கு 202 முதல் 220 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசியது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்