27 C
Jaffna
January 24, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

சானிடைசர் முறையாக எப்படி பயன்படுத்த வேண்டும்? உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்கள்!

சானிடைசரை எப்படி பயன்படுத்துவது? கை சுத்திகரிப்பு (சானிடைசர்) பயன்படுத்தும் போது, நீங்கள் சில விஷயங்களை பின்பற்ற வேண்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, அதை எவ்வளவு பயன்படுத்த வேண்டும், மற்றும் எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

சானிடைசர் என்று சொல்லக்கூடிய கை சுத்திகரிப்பு ஆனது, நம் வாழ்வில் இதுபோன்ற முக்கிய பங்கு வகிக்கும் என்று நாம் என்றாவது நினைத்தது உண்டா? ஆனால் இன்று, இந்த கை சானிடைசர்கள், கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய் தொற்று பரவுவதைத் தடுக்க மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

சுவாரஸ்யமாக, உலக சுகாதார அமைப்பானது, கொரோனா தொற்று நோயில் இருந்து விலகி இருக்க ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பை (சானிடைசர்) பயன்படுத்தும் போது, நாம் மனதில் கொள்ள வேண்டிய சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் உண்மைகளைப் நம்மிடம் பகிர்ந்துள்ளது.
​நாம் எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும்?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கைகளின் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்ய, உங்கள் உள்ளங்கை அளவிற்கு சானிடைசரை எடுத்துப் பயன்படுத்துங்கள். உங்கள் கைகள் உலர்ந்து போகும் வரை, இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து நன்றாக தேய்க்கவும். இந்த செயல்முறை ஆனது, 20 முதல் 30 வினாடிகள் வரை நீடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

​ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் பாதுகாப்பானதா?

சானிடைசர்களில் உள்ள ஆல்கஹால் ஆனது, எந்தவொரு பொருத்தமான உடல்நலப் பிரச்சினைகளையும் உருவாக்காது என்று உலக சுகாதார அமைப்பானது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஒரு சிறிய அளவு ஆல்கஹால் மட்டுமே சருமத்தில் உறிஞ்சப்படுகிறது. பெரும்பாலான தயாரிப்புகளில், தோல் வறட்சியைக் குறைப்பதற்கு எமோலியன்ட் சேர்க்கப்படுகிறது. இந்த எமோலியன்ட், உங்கள் சருமத்தில் ஒரு இனிமையான விளைவைக் ஏற்படுத்தும்.

​எத்தனை முறை பயன்படுத்தலாம்

ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் ஆண்டிபயாடிக் எதிர்ப்பை உருவாக்காது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. பிற கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் போலல்லாமல், நோய்க் கிருமிகள் (தீங்கு விளைவிக்கும் கிருமிகள்) ஆனது, ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களுக்கு எதிர்ப்பை வளர்ப்பதாகத் தெரியவில்லை. எனவே, கை சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்துவது பாதுகாப்பான ஒன்று தான் என்று சொல்லப்படுகிறது.

​பொது இடங்களில்

பொது இடங்களில் இருக்கக் கூடிய சானிடைசர் பாட்டிலைத் தொடுவதன் மூலம் உங்களளுக்கு தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதா? என்னும் கேள்விக்கு, உலக சுகாதார அமைப்பானது இல்லை என்று பதில் அளித்துள்ளது. நீங்கள் உங்கள் கைகளை சுத்தப்படுத்தியவுடன், எந்த விதமான கிருமிகளில் இருந்தும் அவற்றை நீங்கள் கிருமி நீக்கம் செய்துள்ளீர்கள். நாம் எல்லோரும், பொது இடங்களில் சானிடைசரை பயன்படுத்தினால், பொதுவான பொருட்களில் கிருமிகளின் ஆபத்து மிகவும் குறைவாக தான் இருக்கும். அது மட்டுமின்றி, அனைவரையும் இது பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது நல்லதா? அல்லது கையுறைகளை அணிவது நல்லதா? இவை இரண்டில் எது சிறந்தது?

கையுறைகளை அணிவது கிருமிகளை ஒரு மேற்பரப்பில் இருந்து மற்றொரு மேற்பரப்பிற்கு மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தும். மேலும், அவற்றை அகற்றும் போது, உங்கள் கைகளை நீங்கள் மாசுபடுத்த நேரிடும். நீங்கள் கையுறைகளை அணிந்திருந்தால், அவற்றை அகற்றிய பின், உங்கள் கைகளை சானிடைசர் கொண்டு நீங்கள் அவசியம் சுத்தம் செய்ய வேண்டும். கையுறைகளை அணிவது சரியான கை சுகாதாரத்திற்கு மாற்றாக இருக்காது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், சுகாதார ஊழியர்கள், குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே கையுறைகளை அணிவார்கள், என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

east tamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

Leave a Comment