25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழ்ப்பாண பெண், 37 வயது ஆண் உள்ளிட்ட மேலும் 21 மரணங்கள்!

கொரோனா தொற்றினால் இலங்கையில் மேலும் 21 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (16) தெரிவித்துள்ளது.இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள் வருமாறு-

இமதூவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், இமதூவ வைத்தியசாலையில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே மாதம் 11 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முருத்கஹமுல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றால் ஏற்பட்ட நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 58 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 14 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மொரட்டுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நாட்பட்ட நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மீரிகமை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 12 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்;களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இங்கிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய பெண் ஒருவர், மே 15 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 மார்புத் தொற்று, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

புளத்சிங்கள பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், மே 14 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 37 வயதுடைய ஆண் ஒருவர், பண்டாரவளை வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, அவையவங்கள் செயலிழந்தமை, கொவிட் நிமோனியா மற்றும் நுரையீரல் வீக்கம் மற்றும் நீரிழிவு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கெலிஓயா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய பெண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா மற்றும் தீவிர சுவாசக் கோளாறு போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹந்தபான்கொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 14 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹபராதுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய பெண் ஒருவர், மே 11 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய ஆண் ஒருவர், எம்பிலிப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 14 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாக்கியாதெனிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 14 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 14 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடவத்தை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹாலி-எல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், கந்தேகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில்; மே 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் பல உறுப்புக்கள் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மஹியாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெப்ரவரி 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று நிலைமையால் உக்கிரமடைந்த இருதய நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment