நிவாரணப் பணியில் ஈடுபட்ட பெண் அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

Date:

பிலியந்தல பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களிற்கு நிவாரணப் பணியில் ஈடுபட்ட பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண், நிவாரணப்பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ளவர்களிற்கான அரசாங்க நிவாரண திட்டத்தை அவர் வழங்கி விட்டு திரும்பும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளைத் தாக்குவது அல்லது அச்சுறுத்துவது பொறுத்துக்கொள்ளப்படாது என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

சுகாதாரப் பணியாளர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததற்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர் நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்