25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
ஆன்மிகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தம் எடுக்கும் விழா: படைத்தரப்பின் கண்காணிப்பில் நடந்தது! (PHOTOS)

Covid 19 சூழல் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கலுக்கு உப்புநீரில் விளக்கேற்றுவதற்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு பலத்த இராணுவ பொலிஸ் பிரசன்னத்துடன் கட்டுப்பாடுகளுடன் இடம்பெறுள்ளது.

வருடந்தோறும் முள்ளியவளை காட்டா விநாயகர் கோவிலிலிருந்து நடையாக சிலவத்தை தீர்த்த கரைக்கு சென்று கடலில் உப்புநீரில் விளக்கேற்றுவதற்க்காக தீர்த்தம் எடுப்பது வழமை ஆனால் இவ்வருடம் அவ்வாறு அல்லாமல் மட்டுபடுத்தபட்டவர்கள் மாத்திரம் தீர்த்தம் எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்டு உளவியந்திரத்தில் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். இந்த தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான இராணுவம் ,பொலிஸ் பிரசன்னமாகியிருந்தனர் . வீதிகள் தோறும் மக்கள் கும்பங்கள் வைத்து தேங்காய் உடைக்க இராணுவம் ,பொலிஸார் அனுமதி வழங்கவில்லை.

இன்றிலிருந்து எதிர்வரும் 24.05 திங்கள் வரை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் உப்புநீரில் விளக்கெரியும் அதிசயம் இடம்பெற்று 24 ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி விசாக பொங்கல் இடம்பெறவுள்ளது.

Covid 19 பரவல் காரணமாக இம்முறை வைகாசி விசாக பொங்கலுக்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு சடங்குகள் பூசைகள் மட்டும் இடம்பெறவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment