25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
மலையகம்

மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகள் கொவிட் சிகிச்சை நிலையங்களாகின்றன: இராஜாங்க அமைச்சர் ஜீவன்!

பெருந்தோட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிவேயே அவர் இதனை கூறினார்,

அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘ கொரோனாவை கண்டு பயப்படுவதே எமக்குள்ள பலவீனம். ஆந்த பயத்தை ஒழித்தால் அதனை கட்டுப்படுத்த முடியும். மறுபக்கத்தில் மலையக மக்கள் உள்ளிட்ட அனைவரும் சுகாதார வழி முறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

தேயிலை தோட்டங்களில் உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே சம்பள உயர்வை வழங்க முடியும். அதற்காக இரண்டு கைகளை மாத்திரம் கொண்டுள்ள தொழிலாளி ஒருவருக்கு முடியுமான அளவே பறிக்க முடியும்.

30 ஆம் திகதி மேலதிக கொழுந்து பறித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றேன்.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளி பணிக்கு செல்ல முடியாது. மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த மாதமளவில் ஏற்கனவே உள்ள தேர்தல் முறைமைக்கு அமைய ஒரு அறிக்கையை தயார் செய்து சமர்பிக்க எதிர்பார்க்கின்றோம்.

இந்த வருட முடிவுக்குள் அந்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளோம். அடுத்தது கொரோனாவால் பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது. தேசிய வேலை திட்டத்திற்கு அமைய செயற்பட்டு வருகின்றோம்’ என்றார்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கண்டியில் வாகன விபத்து – பாடசாலை மாணவி உயிரிழப்பு

east tamil

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

21 வயது மனைவியின் வாயை வெட்டிய 39 வயது கணவன்!

Pagetamil

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

Pagetamil

Leave a Comment