Pagetamil
சினிமா

மீண்டும் சேரத் துடிக்கும் மாஜி காதலர்: உன் சங்காத்தமே வேண்டாம்னு சொன்ன கவர்ச்சி புயல்!

அலெக்ஸ் ரோட்ரிகஸ் மீண்டும் நடிகை ஜெனிஃபர் லோபஸுடன் சேரத் துடிக்கிறாராம். ஆனால் ஜெனிஃபரோ அலெக்ஸுடனான உறவு முறிந்தது முறிந்தது தான் என்று ஒதுங்கிவிட்டாராம்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ் முன்னாள் பேஸ்பால் வீரர் அலெக்ஸ் ரோட்ரிகஸை கடந்த 2017ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தார். 2019ம் ஆண்டு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அலெக்ஸுக்கும், டிவி நடிகை மேடிசன் லெக்ராய்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான வேகத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

அலெக்ஸை பிரிந்த லோபஸ் தற்போது தன் முன்னாள் காதலரான நடிகர் பென் அஃப்லெக்குடன் இருக்கிறார். அவர்கள் ஜோடியாக காரில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. ஒரு காலத்தில் பென் அஃப்லெக்கிற்கும், லோபஸுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்தை நிறுத்திவிட்டு பிரிந்துவிட்டனர்.

தற்போது 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இது அலெக்ஸ் ரோட்ரிகஸுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். லோபஸ் இப்படி செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லையாம். இருப்பினும் மீண்டும் லோபஸுடன் சேர விரும்புகிறாராம். காதலை புதுப்பிக்க முடியாவிட்டாலும், நட்பாக இருக்க விரும்புகிறாராம். ஆனால் அலெக்ஸின் சங்காத்தமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம் லோபஸ்.

இந்நிலையில் ஜெனிஃபர் லோபஸுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,

லோபஸ் அலெக்ஸுடனான தொடர்பை துண்டித்துவிட்டார். லோபஸும், அஃப்லெக்கும் சேர்ந்திருப்பது அலெக்ஸுக்கு ஈகோ பிரச்சனையாகிவிட்டது. அலெக்ஸின் நடவடிக்கை பிடிக்காததால் தான் அவருடன் பேச விரும்பவில்லை லோபஸ்.

அலெக்ஸை பிரிந்ததில் ஜெனிஃபர் லோபஸ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். அலெக்ஸுடனான உறவு முறிந்துவிடக் கூடாது என்று லோபஸ் பல மாதங்களாக மிகுந்த முயற்சி செய்தார். ஆனால் அவர் சந்தோஷமாக இல்லை. அதன் பிறகே அலெக்ஸை பிரிவது என்று முடிவு எடுத்தார்.

அவருக்கு அலெக்ஸ் மீதான நம்பிக்கை போய்விட்டது. அதனால் இனியும் அவருடன் இருந்து நேரத்தை வீணடிக்க லோபஸ் விரும்பவில்லை என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“குடும்பத்துடன் விரதம் இருக்கும் நயன்தாரா” – ‘மூக்குத்தி அம்மன் 2’ படவிழாவில் தயாரிப்பாளர் தகவல்

Pagetamil

காதல் முறிவு: விஜய் வர்மாவை பிரிந்தார் தமன்னா!

Pagetamil

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!