கிளிநொச்சியில் 3 நாளில் 48 தொற்றாளர்கள்!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் பளையில் 5 பேருக்கும், கரைச்சியில் 22 பேருக்கும், கண்டாவளையில் 11 பேருக்கும், பூநகரியில் 3 பேருக்கும், கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை சேர்ந்த 7 பேருக்கும் என 48 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கல்மடு 7 ஆம் யுனிற் பகுதியில் ஒரு நாளில் பலருக்கு தொற்று இனம் காணப்பட்டமையால் குறித்த பகுதி மாத்திரம் முடக்கப்படுகிறது என மாவட்ட அரச
அதிபர் அறிவித்துள்ளார்.

எனவே நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொது மக்கள் அதிக விழிப்புடன் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக
பின்பற்றி,சுகாதார துறையினருக்கும், பாதுகாப்பு கடமைகளில்ஈடுபட்டிருக்கின்றவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்