ஓப்போ இந்த ஆண்டின் கடைசி மார்ச் மாதத்தில் ஃபைண்ட் X3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இப்போது, நிறுவனம் தனது முதன்மை ஸ்மார்ட்போனின் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தியான்வென்-1 வெற்றிகரமாக தரையிறங்கியதைக் குறிக்கும் வகையில் ஓப்போ இன்று சீனாவில் ஃபைண்ட் X3 ப்ரோ மார்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் புதிய சாம்பல் வண்ண மாறுபாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ‘Mars 2021 Utopia Planitia’ என்று தொலைபேசியின் பின்புறத்தில் கீழே இடது மூலையில் பொறிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஓப்போ ஃபைண்ட் X3 புரோ மார்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் எடிஷன் மூன்று கலர் ஃபில்டர்களுடன் வருகிறது. அவை பூமியில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இருந்தாலும் சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட படங்கள் போல தோற்றமளிக்கின்றன. இது தவிர, நான்கு புதிய theme களுடன் இந்த தொலைபேசி வருகிறது, இது செவ்வாய் கிரகத்தில் காலை, நண்பகல், மாலை மற்றும் இரவு எப்படி இருக்கும் என்பதை பயனர்களுக்குக் காட்டுகிறது.
இதன் விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை அசல் மாடலில் இருந்து மாறாமல் அப்படியே இருக்கிறது. இதன் பொருள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC, 50MP + 50MP + 13MP + 3MP குவாட்-கேமரா அமைப்பு, 16MP செல்பி கேமரா மற்றும் 65W உடன் 4,500mAh பேட்டரி ஆகியவற்றுடன் 120 Hz refresh rate கொண்ட 6.7 அங்குல QHD + AMOLED டிஸ்ப்ளே இருக்கும். சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த சிறப்பு பதிப்பு ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஒரே ஒரு மாடலில் மட்டும் கிடைக்கிறது.

இதன் விலை சீனாவில் CNY 6,999 (தோராயமாக ரூ.79,675) ஆகும். இது ஏற்கனவே சீனாவில் முன்பதிவுச் செய்ய கிடைக்கிறது, இது மே 16 முதல் விற்பனைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.