மலையாள சினிமாவில் பிரபல நடிகராக திகழும் உன்னி தேவ்வின் மனைவி திருமணமான ஒன்றரை ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் உன்னி தேவ். இவருக்கும் பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமானது. இந்நிலையில் திருமணமான ஒன்றரை ஆண்டுக்குள் உன்னி தேவ்வின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் உன்னி தேவ். இவர் இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹீம், ஆடு, ஷிபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் கேரளா மாநிலம் வெம்பயம் பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் எர்ணாகுளம் அங்கமாலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, உன்னி தேவ் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கிய பிரியங்கா, நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முந்தைய நாள் பிரியங்கா வட்டப்பாறா காவல் நிலையத்தில் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் புகார் அளித்த மறு நாளே பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா வீட்டிற்கு வந்த போது அவரது உடம்பில் காயங்கள் இருந்ததாகவும் அவரது சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பிரியங்காவின் நகைகளை எல்லாம் விற்று உன்னி செலவு செய்து விட்டதாகவும் அதுமட்டுமின்றி பிரியங்காவின் அம்மாவிடமும் அவ்வப்போது உன்னி பணம் பெற்றுள்ளதாகவும், நகை, பணம் அனைத்தையும் செலவு செய்த பின் பிரியங்காவை அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும் பிரியங்கா குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பிரியாங்காவின் உறவினர் ரேஷ்மா என்பவர் கூறும் போது, உன்னி அவரை அடித்து உதைக்கும் காட்சியையும் வீடியோவாக பதிவு செய்து பிரியங்கா வைத்திருந்ததாகவும், வீட்டிற்கு வந்ததும் உன்னி மீது போலீஸில் புகார் அளித்து, அவர் மீது வழக்கு தொடரும் முடிவில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் உன்னி தேவ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பிரியங்கா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.