நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலைமைகள் அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் மாங்குளம் வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட தொற்றை தொடர்ந்து ஒரு தொகுதியினருக்கும் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊடாக இன்னொரு தொகுதியினருக்கும் கொரோனா தொற்று பரவி வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே கடும் அச்சமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று பயணத்தடை போடப்பட்டிருக்கும் நிலையில் நாளைய தினம் மக்கள் நடமாடக் கூடிய வாய்பு உள்ள இடங்களை இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் முக்கிய நகரங்கள் பேருந்து தரிப்பிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகர் பகுதி, பேருந்து தரிப்பிடம் மற்றும் திருமுறிகண்டி ஆலய வளாகம் மற்றும் அதனை அண்டிய கடை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எலும்பு உப அலுவலக பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்கள் இணைந்து தொற்று நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.