வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்: முல்லைத்தீவு, மன்னாரிலும் எகிறியது!

Date:

வடக்கில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வடக்கில் இன்று 642 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 9 பேரும்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 11 பேரும், மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர்,  சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மானிப்பாய் வைத்தியசாலைகளில் தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். முல்லைத்தீவில் அடையாளம் காணப்பட்ட 20 பேரும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள்.

கிளிநொச்சி வைத்தியசாலை 4 பேர், பளை வைத்தியசாலை ஒருவர். கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், மன்னார் வைத்தியசாலையில் ஒருவர் (சுகாதார உத்தியோகத்தர்) தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா வைத்தியசாலை 1, பூவசரசங்குளம் வைத்தியசாலை 1, வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்