24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இந்தியா

சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய 6ம் வகுப்பு மாணவன்!

ராஜபாளையத்தில் சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய 6ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் சாலையை சேர்ந்த ராமகிருஷ்ணன் – கனகா தம்பதியரின் மூத்த மகன் நிரஞ்சன் குமார் (வயது 12). ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் சிறுவயது முதல் சமூக ஈடுபாட்டில் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்து வந்துள்ளார்.

இவரது தந்தை கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாயாரின் அரவணைப்பில் இருந்து வந்த நிலையில் ஏழ்மையான சூழலில் பள்ளிக்கு செல்லும்போது தனது தாய் கொடுக்கும் பணத்தை வைத்து சொந்தமாக சைக்கிள் வாங்குவதற்காக சிறுக சிறுக உண்டியலில் பணம் சேமித்து வைத்துள்ளார்.

தற்பொழுது கொரோனோ பேரிடர் காலத்தில் தமிழக அரசிற்காக உதவி செய்வதில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை தமிழக முதல்வரின் கொரோனோ நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்து இன்று ராஜபாளையம் வட்டாட்சியர் ரங்கநாதனிடம் வழங்கினார்.

இவரது தந்தை ராமகிருஷ்ணன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் சைக்கிள் வாங்க இயலாத நிலையில் கொரோனா நிவாரணத்திற்காவது பயன்படும் என்ற எண்ணத்தில் நிதி வழங்குவதாக தெரிவித்தார். சிறுவனின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment