இன்று வட மாகாணத்தில் 61பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகினர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் 858 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
இன்றைய பரிசோதனையில் யாழ் மாவட்டத்தில் 36 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேர், வவுனியா மாவட்டத்தில்11 பேர், மன்னார் மாவட்டத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
மன்னார் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 3 பேர், மல்லாவி வைத்தியசாலையில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கிளிநொச்சி பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகினர். இவர்கள் பூநகரி பிரதேச செயலக உத்தியொகத்தர்கள்.
கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், தர்மபுரம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர் (வவுனியா பல்கலைகழகம்), வவுனியா வைத்தியசாலையில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காண்பட்டனர்.
யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட 13 பேர் (ஒருவர் வைத்தியசாலை ஊழியர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இருவர்), பருத்தித்துறை வைத்தியசாலையில் 3 பேர், சாவகச்சேரி வைத்தியசாலை 2, நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலை 1.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.