25.4 C
Jaffna
January 24, 2025
Pagetamil
கிழக்கு

நினைவுச்சின்னம் உடைக்கப்பட்டது தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுவதன் இன்னொரு சாட்சி: பா.அரியநேத்திரன்!

முள்ளிவாய்க்காலில் நடப்பட்ட நினைவுச்சின்னத்தை உடைத்ததன் மூலம் இலங்கையில் தமிழ்மக்களின் உரிமை எந்தளவில் மறுக்கப்படுகிறது என்பதை சர்வதேசத்திற்கு பறைசாற்றியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுகட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னங்களை உடைத்தமை தொடர்பாக மேலும் கூறுகையில்,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று போர் மௌனிக்கப்பட்டு 12, ஆண்டுகள் கடக்கும் இவ்வேளையில் முள்ளிவாய்க்கால் நினைவுதூபியில் இருந்த “ஏந்தியகைகள்” அடையாளமாக கடந்த பத்துவருடங்களாக்அமைந்திருந்த நினைவு கல்லை சேதப்படுத்தி இலங்கை நாட்டின் இனவாதம் மீண்டும் ஒருமுறை சர்வதேசத்திற்கு உணர்த்தியுள்ளது.

உண்மையில் இலட்சக்கணக்கான தமிழினப்படுகொலைகளை சந்தித்த முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் உயிர்நீத்த அனைத்து உறவுகளையும் நினைவுகூரும் தினமாக வருடாவருடம் மே18,ம் நாள் எமது உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விளக்கேற்றி மௌனப்பிரார்தனை்செய்து இறந்த உறவுகளின் உற்றார் சுற்றார் எல்லோரும் அங்கு சென்று நினைவுவணக்கத்தை்செய்து்வருவது வழமையாகும்.

இந்தவருடமும் அதற்கான ஒழுங்குகளை கத்தோலிக்கமதகுருமார் உட்பட பலரும் செய்துவந்துள்ளனர் இந்நிலையில் இரவோடு இரவாக அங்கிருந்த நினைவுச்சின்னம் உடைக்கப்பட்டு அதே இடத்தில் அந்த கை அடையாளம் சேதப்படுத்தியுள்ளமையை நோக்கும்போது இனவாத அகோர முகம் இந்த செயலை செய்துள்ளமை கொடிட்டு காட்டப்படுகிறது.

தற்போது கொரோணா நோய்பரவலால் உண்மையில் அந்த இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த தடவை அந்த இடத்தில் கூடமுடியாது என்பது எல்லோரும் அறிந்த விடயமாக இருக்கும்போது் இவ்வாறான மனித நேயமற்ற செயலானது பல தமிழ் நெஞ்சங்களில் பாரிய மனத்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரேநாடு ஒரேசட்டம் என கூறப்பட்டாலும் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் வேறு விதமாகவே சட்டங்கள் உள்ளதா என்ற கேள்வியும் தொடராக எழுந்துள்ளது!
எனவே இவ்வாறான கீழ்த்தரமான செயல் கண்டிக்கத்தக்கதுடன் சர்வதேசம் இதனை புரிந்து கொள்ளவேண்டும் எனவும் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

east tamil

அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

east tamil

சேருவிலவில் தரித்து நின்ற பட்டா வாகனத்துடன் வேன் மோதி விபத்து

east tamil

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவு நாள்

east tamil

திருக்கடலூரில் கரையொதுங்கிய இறந்த கடலாமை

east tamil

Leave a Comment