அப்பா 8 அடி பாய்ந்தால் மகள் 16 அடி பாய்கிறார் என ஸ்ருதி ஹாசனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். பின்ன என்னங்க, சீசனிற்கு சீசன் காதலர்களை மாற்றிக் கொண்டு, குடித்தனம் நடத்தினால் நெட்டிசன்கள் பொங்குவார்கள்தானே.
கமலஹாசனுக்கும் நடிகைகளுக்கும் ஏகப்பட்ட பொருத்தம் இருக்கிறது. கமல்ஹாசனுடன் நடிக்கும் ஒவ்வொரு நடிகைகளுடனும் ஒரு கிசுகிசு வந்துவிடும். அப்படியொரு கைவித்தைக்காரன்!
அது தற்போது அவரது மகளுக்கும் தொடர்கிறது போல. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பின்னர் தமிழ், ஹிந்தி என கொடிகட்டிப் பறந்தவர் ஸ்ருதி ஹாசன். தற்போது விஜய் சேதுபதியுடன் தமிழில் லாபம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து வந்ததும், அவர் தான் தன்னுடைய மகளின் கணவர் என கமலஹாசன் அவரை செல்லும் இடமெல்லாம் அழைத்துச்சென்று பிரபலப்படுத்தியதும் நினைவிருக்கலாம்.
பின்னாளில் ஸ்ருதிக்கும், காதலருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் தனிமையில் வசித்து வந்த ஸ்ருதிஹாசனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வேறு ஒரு காதலர் கிடைத்துள்ளார்.
சமீபகாலமாக இருவரும் வெளியில் சுற்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது இருவரும் லிவிங் டுகெதர் முறையில் மும்பையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.




