26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
தொழில்நுட்பம்

சுழலும் கமராக்களுடன் ஆசஸ் ஜென்ஃபோன் 8 & ஜென்ஃபோன் 8 ஃபிளிப் அறிமுகம்! – விவரங்கள்

ஆசஸ் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஜென்ஃபோன் 8 மற்றும் ஜென்ஃபோன் 8 ஃபிளிப் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட்போன் அழகான முதன்மை ஸ்மார்ட்போனாகவும், மற்றொன்று தனித்துவமான சுழலும் கேமரா உடனும் கிடைக்கிறது. ஆசஸ் ஐரோப்பா மற்றும் தைவானில் ஜென்ஃபோன் 8 தொடரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது, விரைவில் மற்ற சந்தைகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசஸ் ஜென்ஃபோன் 8 போனின் அடிப்படை மாடலுக்கான விலை €670 (தோராயமாக ரூ.59,600) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது அறிமுக சலுகையாக €600 (தோராயமாக ரூ.53,400) விலையில் கிடைக்கும்.

ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக், ஹொரிசன் சில்வர் மற்றும் மூன்லைட் ஒயிட் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் வருகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் 8 ஃபிளிப் அடிப்படை மாடலுக்கான விலை €800 (தோராயமாக ரூ.71,200) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் கேலடிக் பிளாக் மற்றும் பனிப்பாறை சில்வர் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

ஆசஸ் ஜென்ஃபோன் 8

ஆசஸ் ஜென்ஃபோன் 8 இல் 5.9 இன்ச் சாம்சங் AMOLED டிஸ்ப்ளே 120 Hz புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது, இது HDR 10 மற்றும் HDR 10 + சான்றிதழ் கொண்டது, மேலும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் திரை பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் சோனி IMX 686 முதன்மை சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் சோனி IMX 363 அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்கு, 12 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

தொலைபேசியின் உட்புறத்தில் குவால்காமின் முதன்மை ஸ்னாப்டிராகன் 888 செயலி அட்ரினோ 660 GPU உடன் இணையாக இயங்குகிறது. மென்பொருள் முன்னணியில், ஜென்ஃபோன் 8 ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி, 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ஆகிய நான்கு RAM விருப்பங்களும், 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களும் இருக்கும். ஆசஸ் ஜென்ஃபோன் 8 இல் 5ஜி, வைஃபை 6/6E, NFC, புளூடூத் 5.2 ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன, மேலும் இது IP68 சான்றிதழ் பெற்றது.

ஆசஸ் ஜென்ஃபோன் 8 ஃபிளிப்

ஆசஸ் ஜென்ஃபோன் 8 ஃபிளிப் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்புடன் 6.67 அங்குல AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90 Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசியும் ஸ்னாப்டிராகன் 888 செயலி மூலம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஜென்ஃபோன் 8 போன்ற கேமராக்களையும் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸையும் வழங்குகிறது. கேமராக்கள் செல்ஃபிக்களுக்காக முன்பக்கமாக சூழலக்கூடியது. ஆசஸ் ஜென்ஃபோன் 8 ஃபிளிப் 5,000 mAh பேட்டரியை குயிக் குயிக் சார்ஜ் 4.0 உடன் ஆதரிக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment