வரணி பகுதியில் வீதியில் பால வேலை இடம்பெறும் பகுதியில் மயக்க நிலையில் இருந்து இரண்டு இளைஞர்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டனர்.
நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் தவிர வேறு வர்த்தக நிலையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. எனினும், எப்படியோ “வரணி குடிமக்கள்“ இருவர் நேற்று இரவு அதிக மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
வரணி- இயற்றாலை வீதியில், பாலப் புனரமைப்பு நடக்கும் பகுதிக்குள் விழுந்துள்ளனர்.
இருவரும் அந்த பகுதியில் மயக்க நிலையில் இருந்துள்ளனர். வீதி ரோந்தில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் அவர்களை அவதானித்து, அவசர நோயாளர் காவு வண்டியை தொடர்பு கொண்டு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மகாலிங்கம் மகிந்தன் (28), காந்தராசா சசீவன் (22) ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவரும் உயிராபத்தான நிலைமையில் இருந்ததால், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.