24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
ஆன்மிகம்

எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் உதவக்கூடிய ராசிகள்!

ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனிப்பட்ட இயல்பு, குணநலம், ஆளுமை இருக்கிறது. சிலர் எந்த சூழலிலும் தன்னை பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று இருப்பார்கள். சிலரோ, எந்த சூழலிலும் நம்மை நம்பியோரை கைவிட்டு விடக்கூடாது, அவர்களுடன் இருக்க நினைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மோசமான சுழலிலும் மற்றவர்களைப் பற்றி சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஜோதிடத்தின் அடிப்படையில் இந்த 5 ராசியினர் எப்படிப்பட்ட கஷ்ட காலங்களிலும் தன்னை நம்பியவருடன் இருப்பார்கள் என்பதை பார்ப்போம்.

​கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே மற்றவர்களைப் பற்றி சிந்திப்பவர்களாகவும், அக்கறையுடனும் ஆர்வத்துடனும் இருப்பவர்களாக கருதப்படுகிறார்கள்.

தன்னை சார்ந்தவர்களுக்கு, நம்பியோருக்கு அவர்களின் சிக்கலான நேரங்களில் தேவைப்படும் போதெல்லாம், உங்களுடன் நிற்பார்கள். இவர்கள் எப்போதும் தன்னை நம்பியோருக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கடக ராசியினரை நண்பராக கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் கஷ்டமான நேரத்தில் உங்கள் மனக்கவலையை இவர்களிடம் சுதந்திரமாகப் பேசலாம்.

நம் மனதை ஆளக்கூடிய சந்திரனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே

​கன்னி

கன்னி ராசியினர் தங்களுக்காக மட்டுமல்லாமல், தங்களை சுற்றியுள்ளவர்களுக்காகவும் சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு தேவையான கஷ்ட நேரத்தில் உங்களுக்கு வந்து உதவுவார்கள்.

உங்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். கஷ்டமான நேரத்தில் உங்களின் கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவி செய்வார்கள். பல்வேறு நற்பண்புகளைக் கொண்ட இவர்கள் எப்போதும் சமூகப் பணிகளில் முன்னணியில் இருப்பார்.

துலாம்

துலாம் ராசியினர் எதிலும் தராசு போல சமமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இருப்பினும், உறவுகளை மிகவும் நேசிப்பவர்கள் ஆவர். இவர்கள் தாங்கள் நேசிக்கும் நபர்களுக்கு அவர்கள் நினைப்பதை விட மிகவும் அக்கறை கொண்டு உதவுவார்கள்.

இந்த ராசியினரின் மிக உன்னத விஷயம் என்னவென்றால் யாரைப் பற்றியும் ஒரு தவறான கருத்தை மனதில் உருவாக்கிக் கொள்ளமாட்டார்கள். எந்த நேரத்தில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் சமூகத்தில் படிப்படியாக முன்னேறி சமூகத்திற்கு உதவுபவர்களாக இருப்பார்கள்.

​மிதுனம்

மிதுன ராசி குறியீடே இரண்டு பெண்கள் சேர்ந்திருப்பது போன்ற அமைப்பு தான். இயற்கையிலேயே மிகவும் நல்லவர்களாகக் கருதப்படுகிறார்கள். எந்த நேரத்திலும் அவர்களை உதவிக்கு அழைத்தாலும் ஓடோடி வந்து உதவ வருவார்கள்.

எந்த ஒரு சூழலிலும் உங்கள் கருத்தைக் கேட்பவராகவும், துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள ஏற்றவராக இருப்பார்கள். இக்கட்டான சூழலில் உதவுபவராக இருப்பார்கள். இவர்களை கண்களை மூடிக்கொண்டு நம்பலாம். இவர்களுக்கு அனைவரும் நண்பர் என்று யாரும் இல்லை. அதே போல எதிரி என்றும் இல்லை.

​மீனம்

மீன ராசியினர் மற்றவர்களைப் பற்றி அதிகம் யோசிப்பவர்கள். ஒருவருக்கு உதவி செய்யும் போது எதைப் பற்றியும் சிறிதும் கவலைப் படுவதில்லை. இவர்கள் மிகவும் கனிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களை எந்த நேரத்திலும் நம்பலாம். மனித தன்மை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment