அவுஸ்திரேலிய கனவுடன் சென்ற யாழ், முல்லை, மட்டு இளைஞர்களிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Date:

கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 29 பேரும், அந்தக் குழுவுக்கு உதவிய ஒரு நபரும் மே 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் பதில் நீதிவான் நுவான் ஜெயவீர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

19-51 வயதுக்குட்பட்ட சிலாபம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சூத்திரதாரி சிலாபததை சேர்ந்தவர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 14 நபர்கள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர், மீதமுள்ள 15 சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகள் சிலாபம் பொலிசாரால் மேற்கொள்ளப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மெட்ரோ' (Metro)...

ரொனால்ட்டோவை இடைநீக்கம் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு

அணியை விட்டு வெளியேறியதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவை போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்...

அமெரிக்காவில் வீடொன்றில் 8 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில், இரண்டு குழந்தைகள் உட்பட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்