விஜய் டிவி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் மரணத்திற்கு பிரபலங்கள் அஞ்சலி!

Date:

கொரோனா தொற்று காரணமாக பிரபல சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் கொரோனா காரணமாக மரணமடைந்தார். சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் நெல்லை சிவா மரணமடைந்த துயரத்தில் இருந்து சின்னத்திரை ரசிகர்கள் மீளாத நிலையில் இன்று மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. விஜய் டிவியின் தேன்மொழி பிஏ தொடரில் ஜாக்குலினின் அப்பாவாக நடித்து வந்த நடிகர் குட்டி ரமேஷ் தற்போது கொரோனா காரணமாக மரணமடைந்தார்.

கொரோனா தொற்று காரணமாக அவரது உடல்நிலை அதிகம் மோசமான நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு  அவர் மரணமடைந்தார். அதை விஜய் டிவியும் உறுதி செய்து உள்ளது.

குட்டி ரமேஷ் இறப்பு பற்றிய செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி ஆன நடிகை ஜாக்குலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்து உள்ளார்.

“குட்டி ரமேஷ் அப்பா. நீங்கள் உயிருடன் இல்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் சிறந்த மனிதராகவும் இனிமையான அப்பாவாகும் இருந்தீர்கள். உங்களை அதிகம் மிஸ் செய்வேன். எனக்ளும் அப்பாகளுக்கும் ராசி இல்லை. RIP” என ஜாக்குலின் தெரிவித்து உள்ளார்.

குணச்சித்திர நடிகை கம்பம் மீனா செல்லமுத்து, “அய்யோ கடவுளே என்ன கொடுமை இது ரமேஷ் ஸார். எப்பவுமே சுறுசுறுப்பா கலகலனு இருப்பிங்களே … நீங்க சரியாகி வந்துருவிங்கனு முழு நம்பிக்கையோட இருந்தோமே … ….. மீனாம்மா வாங்க டிக்டாக் பண்ணலாம் ஃபேஸ்புக்ல போடுங்க இன்ஸ்டால போடுங்கனு சொல்லுவிங்களே ரமேஷ் ஸார். எத்தனை லைக் வந்துருக்கு என்னென்ன கமெண்ட் வந்திருக்குனு கேப்பிங்களே ரமேஷ் ஸார்.. உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஸார்” என கூறி உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்