நெல்லியடி பொலிஸ் பிரிவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 8 குடுமபங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை அல்வாய் பகுதியிலுள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. இதில் பலர் கலந்து கொண்டிருந்த நிலையில், தகவலறிந்து நெல்லியடி பொலிசாரும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரும் அந்த வீட்டிற்கு சென்றனர்.
அவர்கள் வருவதை அவதானித்ததும், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைதெறிக்க தப்பியோடினர். சிலர் காலணிகளை எடுக்காமலும் தப்பியோடினர்.
பிறந்தநாள் கொண்டாடப்பட்ட வீட்டில் கைப்பற்ற கமராவில் பதிவாக புகைப்படங்களின் அடிப்படையில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் தனிமைப்படுத்தப்படடிருந்த ஒருவரும் உள்ளடங்குகிறார். நெல்லியடி சுபாஸ் பேக்கரி பணியாளரான அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
8 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.