கூடலூர் அருகே கழிவறைக்கு சென்று திரும்பிய பெண்ணை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த கரிய சோலை TAN TEA நம்பர் 4 அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் அரசு தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று இரவு பூங்கொடி (வயது 50) என்பவர் அவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பிய போது அங்கிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியது.
இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானதையயடுத்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த யானையை இப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்..