29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

விவோ இன்று விவோ Y12s 2021 எனப்படும் புதிய ஸ்மார்ட்போனை வியட்நாம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது நீலம் மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வருகிறது.Y-சீரிஸ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போனில் 5000 mAh பேட்டரி, 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 13 MP பிரைமரி கேமரா மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

விவோ Y12s 2021 விவரக்குறிப்புகள்

விவோ Y12s 2021 6.51 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே 720 x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 20:9 திரை விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆக்டா கோர் 1.95GHz ஸ்னாப்டிராகன் 439 உடன் இணைந்து 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயங்குகிறது. மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக ஸ்டோரேஜை 256 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

விவோ Y12s 2021 தொலைபேசியில் ஃபேஸ் அன்லாக் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது . இது 5,000 mAh பேட்டரி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 OS அடிப்படையில் ஃபன்டச் OS 11 உடன் இயங்குகிறது.

தொலைபேசியில் இரட்டை பின்புற செவ்வக கேமரா அமைப்பு 13 மெகாபிக்சல், மற்றும் 2 மெகாபிக்சல் கேமராக்களைக் கொண்டது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.

இணைப்பு விருப்பங்களில் இரட்டை 4 ஜி VoLTE, 2.4 GHz வைஃபை, புளூடூத் 5.0, GPS, மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். கைபேசி 164.41 x 76.32 x 7.41 மிமீ அளவுகளையும் மற்றும் அதன் 191 கிராம் எடையையும் கொண்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment