Pagetamil
சின்னத்திரை

பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் மீனா செல்லமுத்து.அவர் கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்தபோது பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டாராம். அவரது தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. கை எலும்பு முறிந்த நிலையில் கட்டு போட்டு கொண்டு அவர் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் கூறி இருப்பதாவது..

“தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிருச்சுனு சொல்வாங்க ….. அதே தான் என் அம்மையப்பன் அருளால் ….எனக்கு கையோடு போயிருச்சு…… 06/05/2021 அன்று பாத்ரூமில் வழுக்கி விழுந்து ( வீட்டில் யாரும் இல்லை நான் மட்டும் தனியாக) பின்னந்தலையில் அடி விழுந்தும் என் அப்பன் ஈசன் அருளால் கை மட்டும் மணிகட்டு உடைந்துவிட்டது .. என்னுடைய தைரியத்தால் மனபலத்தால் அந்த வலியோடு என் சின்னபையனுக்கு போன் பண்ணி அவன் ஆபிஸிலிருந்து அடிச்சுபுடிச்சு வந்து இந்த லாக்டௌன் நேரத்தில் வடபழனி புத்தூர்கட்டு போய் உடைந்தகைய நல்லா உடைச்சு கட்டு போட்டுட்டு வந்திருக்கிறேன். நல்லாருக்கேன்”

“என்னோட சந்தோஷம் துக்கம் எல்லாத்தையுமே இந்த பத்து வருசமா உங்களோட தான் பகிர்ந்துக்கிறேன். சீக்கிரமாக கை சரியாகிடும் .. திங்கிங் பாஸிட்டிவ் .. எந்த ஒரு விசயம் நடக்குதோ அது நல்லதுக்குனு நினைக்கனும் .. எந்த ஒரு விசயம் நடக்கலையோ அது ரொம்ப நல்லதுக்குனு நினைக்கனும் .. கண்மூடி முழிக்குங்குள்ள நடந்து முடிஞ்சிருச்சு இதுவும் கடந்து போகும்.”

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

Pagetamil

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

‘யானை மிதித்து சாகக் கிடந்தேன்… தூக்கிச் சென்றவன் என் மார்பை பிடித்து சுகம் கண்டான்’: பிரபல தமிழ் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

Pagetamil

கணவனை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!