25.5 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

சூறாவளி தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம்: மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தல்!

சவுதி அரேபிய கடற்பரப்பில் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம் உருவாகியுள்ளது.

அடுத்து வரும் சிலதினங்களில் இந்தத்தாக்கம் தீவிரம்பெற்று இலங்கையின் வடக்கு மேற்கு நோக்கி கடக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை முதல் இந்தத் தாழமுக்கம் மேலும் தீவிரமடையலாம். தீவிரம் பெற்ற சூறாவளி இலங்கையின் வடக்கு மேற்கு நோக்கி திசையூடாக கடக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், அடுத்து வரும் சில தினங்களில் காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வரையும், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையும் உள்ள கரையோரப்பிரதேசங்களில் கடல் சற்றுக் கொந்தளிப்பாக இருக்கும் என அறிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்களில் குறிப்பிட்ட பிரதேசங்களில் கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்சமயம் இந்தக் கடற்பரப்புக்களில் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு வரும்படி திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் அரசியலை ஒழிக்க உறுதி – ஜனாதிபதி

east tamil

மருந்து உற்பத்தி விரைவில் அதிகரிக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

யாழில் சுழல் காற்றால் 48 குடும்பங்கள் பாதிப்பு

Pagetamil

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

east tamil

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

Leave a Comment