26.3 C
Jaffna
January 26, 2025
Pagetamil
மலையகம்

கொரோனா தொற்று பரவலை தடுக்க கொட்டகலை நகரில் பொலிஸார் கடும் எச்சரிக்கை

கடந்த சில தினங்களாக மலையகத்தின் பிரதான நகரங்களை அண்டிய பகுதியில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் காணப்பட்டதன் காரணமாக பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திம்புள்ள பத்தனை பொலிஸார் கொட்டகலை நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முகமாக கடைகளில் கொரோனா இன்னும் ஒழியவில்லை முகக்கவசம் முறையாக அணிய வேண்டும் சமூக இடைவெளி பேண வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய ஸ்டிக்கர்கள் கடையாக சென்று தெளிவுப்படுத்தி வருகின்றனர்.

இதன்போது கடையில் முறையாக முகக்கவசம் அணியாது இருந்தவர்கள், சமூக இடைவெளி பேணாது இருந்தவர்கள், கடையில் சுகாதார பொறிமுறைக்கு அமைவாக தொற்று நீக்கி மற்றும் பதிவேடுகள் பேணப்படாத கடைகள் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

எதிர்வரும் நாட்களில் சுகாதார பொறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் இதுதான் இறுதி அறிவித்தல் எனவும் பொலிஸார் கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்தனர்..

இதேவேளை வாகனங்களில் சமூக இடைவெளி இல்லாது பயணித்தவர்களையும் கடுமையாக எச்சரித்து இறக்கிவிடப்பட்டனர்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

east tamil

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

Leave a Comment