ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் செல்லவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் கலந்து கொள்ள மாட்டார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் (எம்இஏ) நேற்று அறிவித்துள்ளது.
ஜி 7 உச்சி மாநாடு ஜூன் மாதம் பிரிட்டனின் கார்ன்வாலில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளுமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமருக்கு அழைப்பு விடுத்ததைப் பாராட்டுகையில், தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையைப் பொறுத்தவரை, பிரதமர் ஜி 7 உச்சி மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள மாட்டார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.” என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி கூறினார்.
ஜி 7 இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கியது.
இந்த ஏழு நாடுகளைத் தவிர தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.