டெக்னோ பிராண்ட் நைஜீரிய சந்தையில் கேமன் 17 புரோ மொடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கேமன் 17 தொடரின் இரண்டு மாடல்களும் 90 Hz டிஸ்ப்ளே, 5,000 mAh பேட்டரி மற்றும் இது போன்ற சில சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், டெக்னோ கேமன் 17 ப்ரோவின் முக்கிய சிறப்பம்சங்களாக அதன் 48 MP செல்பி கேமரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல அம்சங்கள் கிடைக்கிறது.
டெக்னோ கேமன் 17 புரோ விலை
டெக்னோ கேமன் 17 ப்ரோ ஒரே 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் கலிபோர்னியா ட்ரீம் சில்வர் மற்றும் மாலிபு ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனுக்கு நைஜீரிய மதிப்பில் NGN 125,000 , இந்திய நாணயத்தில் 22,600 ரூபாய் ஆகும்.
டெக்னோ கேமன் 17 புரோ: அம்சங்கள்
டெக்னோ கேமன் 17 ப்ரோ நிலையான டெக்னோ கேமன் 17 ஐ விட சற்றே பெரிய 6.8 இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. கைபேசியின் பவர் பட்டனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
மீடியாடெக் ஹீலியோ G95 SoC மாலி-G76 MC4 GPU, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கு மைக்ரோ SD ஸ்லாட்டுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும், தொலைபேசி 5,000 mAh பேட்டரியை 25W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கொண்டுள்ளது மற்றும் HiOS ஸ்கின் உடன் Android 11 OS அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.
கேமரா பிரிவில், 64MP குவாட்-ரியர் கேமரா மற்றும் 48MP செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, கைபேசி இரட்டை சிம் ஆதரவு, வைஃபை 802.11 b / g / n, புளூடூத், GPS, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் இணைப்பிற்கான யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.