350 மில்லியன் சத்தங்களை குறைக்கும் அம்சத்துடன் “HP எலைட்ஒன் 800 G8 AIO” கம்பியூட்டர் அறிமுகம்!

Date:

பலதரப்பட்ட பணிச்சூழலில் பணிபுரிபவர்களை இலக்காகக் கொண்டு HP நிறுவனம் புதிய கம்பியூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கம்பியூட்டர் எலைட்ஒன் 800 G8 ஆல் இன் ஒன் (AIO) PC என்று பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

350 மில்லியனுக்கும் அதிகமான வகையான குரல்களையும் சத்தங்களையும் வடிகட்டக்கூடிய முதல் HP கம்பியூட்டர் இதுதான் என்றும் கூறப்படுகிறது, மேலும் AI- அடிப்படையிலான சத்தம் குறைக்கும் அம்சத்துடன் உலகின் முதல் வணிக AIO PC ஆக அறிமுகம் ஆகியுள்ளது.

HP எலைட் டெஸ்க் 800 G8 டெஸ்க்டாப் மினி பிசினஸ் PC, HP எலைட் டெஸ்க் 800 G8 ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் பிசினஸ் PC, மற்றும் HP எலைட் டெஸ்க் 800 G8 டவர் பிசினஸ் PC உள்ளிட்ட பிற வணிக PCக்களையும் HP அறிமுகப்படுத்தி உள்ளது.

HP EliteOne 800 G8 AIO PC is the world's first commercial AIO PC with  AI-based noise reduction - TechnoSports

இந்த PC க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மே மாதம் முதல் கிடைக்கும். HP எலைட்ஒன் 800 G8 AIO கம்பியூட்டரைப் பொறுத்தவரை, PC இந்த மாத இறுதியில் சில நாடுகளில் வாங்குவதற்கு கிடைக்கும். இருப்பினும், இதுவரை வெளியான எந்த கணினிகளுக்கும் விலை நிர்ணயம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

HP எலைட்ஒன் 800 G8 AIO PC – 23.8 இன்ச் அல்லது 27 இன்ச் மாடல் என இரண்டு திரை அளவுகளில் கிடைக்கிறது. PC ஒருங்கிணைந்த பாப்-அப் கேமராவையும் கொண்டுள்ளது. இது 11 வது தலைமுறை இன்டெல் கோர் செயலியைக் கொண்டுள்ளது. PC 64 ஜிபி வரை DDR4 RAM மற்றும் 6 TB SSD ஸ்டோரேஜையும் ஆதரிக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்