27.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
உலகம்

பிரேசிலில் கர்ப்பிணிகளுக்கு அஸ்ட்ரோ ஜெனிகா தடுப்பூசி செலுத்த இடைக்கால தடை!

பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்கள் போட்டுக் கொள்ள அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.

கொரோனா தொற்றால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்த பிரேசில் நாட்டில், தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக் மற்றும் பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு வலிப்பு நோய் ஏற்பட்டு கடந்த 10ம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவே காரணம் என கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் 23 வார கர்ப்பிணியாக இருந்துள்ளார். பிரேசிலில் வேறு எந்த கர்ப்பிணி பெண்களுக்கும் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை.

இருப்பினும் இது குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்பதால், பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அங்கு பயன்பாட்டில் இருக்கும் மற்ற தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

ரஷ்ய அணுசக்தி படைகளின் தளபதி குண்டுவெடிப்பில் பலி

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment