இலங்கையில் நேற்று 2,568 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதன்மூலம், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 131,098 ஆக உயர்ந்துள்ளது.
இதில், புத்தாண்டு கொத்தணியுடன் 2,530 பேர் தொடர்புடையவர்கள் என்றும், 38 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 1,030 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 106,641 ஆக உயர்ந்தது.
அதன்படி, நாடு முழுவதும் 23,607 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1