25.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

திருமணத்துக்கு பிறகு ஒழுங்கற்ற மாதவிடாய் , காரணங்கள் இதில் ஒன்றாக இருக்கலாம்!

பெண்ணின் மாதவிடாய் சுழற்சி அவரது இனப்பெருக்க மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கிய பகுதியாகும். திருமணத்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சி சிலருக்கு சீரற்று இருக்கலாம். அதற்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

திருமணத்துக்கு பிறகு மாதவிடாய் என்பது தாமதமாகவோ அல்லது சுழற்சியை கணிப்பதில் கடினமாகவோ இருக்கலாம். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் பின்னால் இருக்கும் காரணங்களை அறிந்துகொள்வது மிக முக்கியம்.

ஏனெனில் மனம், உடல் உணர்ச்சி மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு இவை அவசியம். உங்கள் மாதவிடாய் சுழற்சியில் சரியான நேரத்தில் வராத நிலை ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகும். எனினும் இவை பெரும்பாலும் ஆபத்தானவை அல்ல. இதற்கு காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

​மன அழுத்தம்

திருமணம் என்பதற்கு பிறகு சமயங்களில் மன அழுத்தம் நேரிடலாம். இந்த நேரத்தில் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்தால் அது மாதவிடாய் காலத்தை பாதிக்க செய்யும்.

குடும்ப சூழலில் பொருந்தாத நிலை உணர்ச்சி, மன அழுத்தங்கள் போன்றவை தீவிரமாகும் போது அது தாமதமான மாதவிடாய்க்கு வழிவகுக்கும். மன அழுத்தம் தணிந்ததும் உங்கள் காலங்கள் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.

​கர்ப்பம்

/

தம்பதியர் திருமணத்துக்கு பிறகு பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது கர்ப்பத்தை எதிர்கொள்ளலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது மாதவிடாய் சுழற்சி தாமதமாகலாம். கர்ப்பத்தின் அறிகுறிகளில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய் காலமாகும்.

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை

திருமணத்துக்கு பிறகு குழந்தை பேறை தள்ளிபோடுவதற்கு தம்பதியர் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயன்படுத்துவது உண்டு. பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பக்கவிளைவுகளை உண்டாக்க கூடும். இது மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை உண்டாக்கும்.

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயன்படுத்துவதாக இருந்தால் தம்பதியர் மருத்துவரின் அறிவுரையோடு பயன்படுத்துவது நல்லது.

​பி.சி.ஓ.எஸ்

காலதாமதமான மாதவிடாய் சுழற்சிக்கு பொதுவான காரணம் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் ஆகும். இது மிகவும் தீவிரமானது. திருமணத்துக்கு முன்பே இந்த பாலிசிஸ்டிக் பிரச்சனை கொண்டிருந்தால் மருத்துவரிடம் பேசி சரியான முறையை கையாளலாம்.

திருமணத்துக்கு பின்பும் சரியான சிகிச்சை, வாழ்க்கை முறை, உணவு போன்றவற்றுடன் இதை நிர்வகித்தால் சரியான மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்ளலாம். இல்லையெனில் இவை தீவிரமான பிரச்சனையை கொண்டு விடும்.

​எடை அதிகரிப்பு

திருமணத்துக்கு பிறகு வாழ்க்கை முறை மாறக்கூடும். அப்போது உடல் எடை அதிகரிப்பது பொதுவானது. சில சந்தர்ப்பங்களில் நீங்கள் அதிக கிலோவை அதிகரித்தால் எடை அதிகரிப்பின் பக்கவிளைவுகளில் அது மாதவிடாய் பிரச்சனையை உண்டாக்க செய்யும். அதிக உடல் எடை கொண்டிருந்தால் அது மாதவிடாய் பிரச்சனையை உண்டாக்கும்.

திருமணத்துக்கு பிறகு உடல் எடை அதிகரிக்கும் போது அது மாதவிடாய் சுழற்சியை பாதிக்க செய்யும். படிப்படியாக உடல் எடையை குறைத்தால் மாதவிடாய் சுழற்சி சீராகும். உடல் எடை அதிகரிப்பதை போன்றே உடல் எடை இழப்பும் தாமதமான மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை உண்டாக்கும். .

​தைராய்டு பிரச்சனை

தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்ற தாழ்வை உண்டாக்கும். ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் உங்கள் தைராய்டு அளவு பரிசோதனை செய்வது அவசியம்.

 

தைராய்டு பிரச்சனையில் ஹைப்போ தைராய்டிசம் ஆபத்தானது. உங்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதாக நீங்கள் நினைத்தால் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

​தூக்கத்தில் மாற்றம்

தூக்கத்தில் முறைகேடுகள் உடல் அழுத்தத்துக்கு வழிவகுக்கிறது. இதுவும் ஒழுங்கற்ற மாதவிடாயை உண்டாக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் முதல் மனச்சோர்வு வரை இருப்பவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி மாற்றம் இருக்கலாம்.

தினசரி 6 முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம் என்று மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். தூக்கமின்மை மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இது மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை உண்டாக்குகிறது.

திருமணத்துக்கு பின் உண்டாகும் மாதவிடாய் கால சுழற்சி மாற்றம் ஆபத்தானது அல்ல. ஆனால் இது பொதுவான காரணங்களால் தற்காலிகமானதாக இருக்கலாம். இவை தொடர்ந்து இருந்தால் மாதவிடாய் சுழற்சி அதிக தாமதமாக வருவது அதிக உதிரபோக்கு உண்டாவது போன்றவை எல்லாமே கவனிக்க வேண்டியது என்பதால் இதை அலட்சியம் செய்ய வேண்டாம்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment