கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நேபாளத்தில், சர்வதேச விமானங்களுக்கான தடையை, இம்மாத கடைசி வரை நீட்டித்து, அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அண்டை நாடான நேபாளத்தில், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 14ம் தேதி வரை சர்வதேச விமானம் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 14 நாட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, மே மாதம் 31ம் தேதி நள்ளிரவு வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மறு அறிவிப்பு வரும் வரை புதிய முன்பதிவுகளைத் தொடங்க வேண்டாம் என, விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவ மற்றும் சரக்கு விமானங்கள் இயக்கத்திற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1