தக்கோலம் அருகே கொரோனா பரிசோதனை செய்துகொள்ள பயந்து கூலித் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்திற்கு அருகில் உள்ள கிராமம் சுப்பா நாயுடு கண்டிகை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த மூன்று தினங்களாக காய்ச்சல் இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள கட்டாயப்படுத்தினராம்.
இதற்கு பயந்த சரவணன், புதன்கிழமை காலை அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த தக்கோலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்த சரவணனுக்கு மனைவியும் கலை கல்லூரியில் படிக்கும் மகள் ஒருவரும் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1