25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இந்தியா

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் போக்ஸோ சட்டத்தில் கைது!

தமிழகத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட இலங்கை முகாமை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் வசந்த் என்கிற சூர்யா(19). இவரது குடும்பம் யாழ்ப்பாணம் குருநகரிலிருந்து பல வருடங்களின் முன் படகு மூலம் இந்தியாவிற்கு அகதியாக சென்றனர்.

இவர் 15 வயது சிறுமியை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். அச்சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாது காப்பு நல அலுவலர் சதீஷ்குமார், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்துள்ளனர்.

மேலும் சூர்யா மனைவியான 15 வயது சிறுமி அவரிடம் இருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

Leave a Comment