மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி; ப்ரொமோ வீடியோ வைரல்!

Date:

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கும் மாஸ்டர் ஷெஃப் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். ஆனால் குக் வித் கோமாளி ரசிகர்களோ கடுப்பாகியுள்ளனர்.

ஹீரோ, ஹீரோயினுக்கு அப்பா, வில்லன், குணச்சித்திர கதபாத்திரம், கௌரவத் தோற்றம் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்று நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி செய்த வில்லத்தனம் அனைவருக்கும் பிடித்துவிட்டது.

அந்த படத்திற்கு பிறகு வில்லனாக நடிக்குமாறு பலரும் விஜய் சேதுபதியை அணுகி வருகிறார்கள். இப்படி படங்களுக்கு டேட்ஸ் கொடுக்க முடியாத அளவுக்கு படுபிசியாக இருக்கும் விஜய் சேதுபதி டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்.

மாஸ்டர் ஷெஃப் என்கிற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியை தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கிறார். அந்த நிகழ்ச்சி விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசியிருக்கிறார்களாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இந்த மாஸ்டர் ஷெஃப் தூக்கி சாப்பிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டனர்.

அடேங்கப்பா, டிவி நிகழ்ச்சிக்கே ஹெலிகாப்டரில் பறந்து வருகிறாரே விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் வியந்து போயிருக்கிறார்கள். ஆனால் என்ன தான் செய்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள முடியாது என்று அந்நிகழ்ச்சியின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியை வைத்து குக் வித் கோமாளியை காலி பண்ண முடியாது என்கிறார்கள். அதை பார்த்த மற்றவர்களோ, இது ஒன்றும் குக் வித் கோமாளி போன்று காமெடி நிகழ்ச்சி அல்ல மாறாக சர்வதேச தரத்துடன் வரப் போகும் சீரியஸான சமையல் நிகழ்ச்சி.

உண்மை தெரியாமல் சும்மா கூவ வேண்டாம் என்கிறார்கள். இது தொடர்பாக ட்விட்டரில் ஒரு பெரிய சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஒளிபரப்பானால் அது எப்படிப்பட்டது என்பது தெரியப் போகிறது. அதுவரை சண்டை வேண்டாமே பாஸுகளா

spot_imgspot_img

More like this
Related

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மெட்ரோ' (Metro)...

ரொனால்ட்டோவை இடைநீக்கம் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு

அணியை விட்டு வெளியேறியதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவை போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்