கிளிநொச்சியில் கொரொனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

Date:

தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா நிலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில்
கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் உயர்மட்ட
கலந்துரையாடல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மாவட்டத்தில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில்
அதனை கட்டுப்படுத்துவது பற்றியும் அதற்கான வேலைத்திட்டடங்களை அரச
அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு
மேற்கொள்வது என்பது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி மாவட்டத்தில் செயற்படுவது பற்றியும் பேசப்பட்டது.

இக் கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம்
வைத்தியர் எஸ் சிறிதரன், கிளிநொச்சி படைகளின் தளபதியும் கொரோனா தடுப்பு
செயலணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரனசிங்க,
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் என். சரவணபவன்
உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்