கொரோனா விதிமுறைகளை கணக்கிலெடுக்காமல் சண்டியர் கிண்ண ரி 20 கிரிக்கெட் போட்டி நடத்திய 90’s கிட்ஸ், 2k கிட்ஸ் வாலிபர்கள் கூட்டமாக தனிமைப்படுத்தப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்துறை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் Louts ground சண்டியர்கள் 2021 என ரி20 போட்டிகளை நடத்தி வந்துள்ளனர்.
தற்போது பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளிற்கும், விளையாட்டு நிகழ்வுகளிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், அதை கணக்கிலெடுக்காமல் இளைஞர்கள் பலர் விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சம்பவத்திற்கு பின்னரும் அடங்காத ஊர்காவற்துறை இளைஞர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை Louts ground சண்டியர்கள் 2021 என ரி20 போட்டியை நடத்தியுள்ளனர். இந்த போட்டியில் 90’s கிட்ஸ் ஒரு அணியாகவும், 2k கிட்ஸ் ஒரு அணியாகவும் ஆடினர்.
இதில், சில தினங்களின் முன்னர் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் இந்த போட்டியில் ஆடியுள்ளனர்.
இதையடுத்து, 90’s கிட்ஸ், 2k கிட்ஸ் அணியின் 25 பேரை தனிமைப்படுத்தியுள்ளனர்.