28.4 C
Jaffna
March 9, 2025
Pagetamil
ஆன்மிகம்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (10) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது

குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்ற நிகழ்வானது தடை செய்யப்பட்டுள்ளதோடு ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலய சம்பிரதாய கிரிகைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி இந்த ஆலய கிரிகைகளை ஆரம்பமாகியுள்ளது

அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவத்தின் ஆர்ம்ப நிகழ்வாக இடம்பெறும் பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்கு சென்று பாக்குத்தெண்டல் இடம்பெற்றது

இதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உட்சவ ஆரம்பநாளான இன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் காலை 6 மணிமுதல் விசேட அபிஷேகம் இடம்பெற்று பூசை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது இன்றுமுதல் 15 நாட்களுக்கு இந்த உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 28.02.2025 – வெள்ளிக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2025 – வியாழக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 26.02.2025 – புதன்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 25.02.2025 – செவ்வாய்க்கிழமை

Pagetamil

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் – 24.02.2025

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!