25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இந்தியா உலகம்

அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் இந்தியாவில் கொரோனா தொடர்பில் அறிவுரை!

இந்தியாவில் நிலவும் கொரோனா பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு என்பது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான், அதற்கு தடுப்பூசி தயாரிப்பை உள்நாட்டளவிலும் அதிகப்படுத்த வேண்டும், வெளிநாடுகளில் இருந்தும் வாங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

அதில் குறிப்பாக “ அடுத்த சில வாரங்களுக்கு நாடுமுழுவதும் லாக்டவுன் கொண்டு வர வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். ராணுவத்தை களத்தில் இறக்கி தற்காலிகமான மருத்துவனைகளை அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏபிசி சேனலுக்கு அந்தோனி ஃபாஸி நேற்று பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது :

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் தீர்வு. உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிக்கும் நாடு இந்தியாதான். இந்தியாவில் ஏராளமான வளங்கள் இருக்கின்றன, அதை வைத்து தயாரிக்க வேண்டும். உள்நாட்டளவில் மட்டும் தடுப்பூசி தயாரிக்க முடியாவிட்டால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தலாம்.

இந்தியா விரைவாக தொற்றிலிருந்து மீள வேண்டும் என்ற அவசியம் காரணமாகவே மற்ற நாடுகள் தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்து வருகின்றன. தடுப்பூசி தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி, லட்சக்கணக்கான டோஸ் மருந்துகளை இந்தியாவுக்கு வழங்கலாம்.

அதுமட்டுமல்லாமல், நான் ஏற்கெனவே கூறியபடி, இந்தியாவில் இந்த நேரத்தில் ராணுவத்தை களத்தில் இறக்கி, சீனா உருவாக்கியது போன்று தற்காலிகமான மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.

இதுபோன்ற தற்காலிகமான மருத்துவமனைகள் அமைத்தால் மக்களை தெருக்களில் அமர வைத்து சிகிச்சை அளிக்கத் தேவையிருக்காது, மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என்ற குறைபாடு இருக்காது. ஆக்சிஜன் சப்ளை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது.

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் இல்லாவிட்டால், மிகவும் கொடுமையானது. அதுதான் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியாவுக்கு தற்போது உடனடியாக படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், போதுமான அளவு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன், பிபிஇ ஆடைகள், மருந்துகள் உள்ளிட்டவை அவசியம்.இவ்வாறு அந்தோனி ஃபாஸி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

Leave a Comment