5 மாவட்டங்களைச் சேர்ந்த 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் எட்டிகஹேகல்ல மேற்கு, கே.சி சில்வா கிராம சேவகர் பிரிவு, கதிரான வடக்கு அட்டபாகஹவத்த கிராமம், கதிரான தெற்கு பேசகர்ம கிராமம், சேதவத்த மஹா பமுணுகம பிரதேசம், குஞ்சகஹவத்த கிராம சேவகர் பிரிவின் 44 வது ஒழுங்கை, நில்சிறி கிராம சேவகர் பிரிவின் 3ஆம், 7ஆம் ஒழுங்கைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் நவமடகம கிராம சேவகர் பிரிவின் நவமடகம பிரதேசம், பக்மீதெனியள கிராம சேவகர் பிரிவின் ரன்ஹெலகம பிரதேசம் மற்றும் சேருபிட்டிய கிராம சேவகர் பிரிவின் சேருபிட்டிய உப பிரதேசம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் பலன்னொருவ, கோரளஇம, கும்புக்க மேற்கு,உநாரதங்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் அங்கமன கிராசேவகர் பிரிவும் மொனராகலை மாவட்டத்தின் போபிட்டிய கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.