26.6 C
Jaffna
December 20, 2024
Pagetamil
சினிமா

வெங்கட் பிரபு, பிரேம்ஜிக்கு சிம்பு இரங்கல் செய்தி!

வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தாயார் மணிமேகலை காலமான செய்தி அறிந்த சிம்பு வேதனை அடைந்திருக்கிறார். இதையடுத்து அவர் சமூக வலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு, நடிகர் பிரேம் அமரன் ஆகியோரின் தாயார் மணிமேகலை கங்கை அமரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69.

வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாய் மணிமேகலை மரணம்: திரையுலகினர் இரங்கல்
மணிமேகலை இறந்த செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் மாநாடு படத்தில் நடித்துள்ள சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தன் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை...
எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள்.

கடந்த இரண்டு வருடமாக, இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும்..இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.

ஆனால்,அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது     எவ்வளவு கடினம் என்பதறிவேன்.அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று.ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு.

அப்பாவிற்கும், குடும்பத்திற்கும், உங்களனைவருடனும்,இழப்பையும்...வேதனையையும் பகிர்ந்துகொள்கிறேன்.அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கண்ணீருடன்,
சிலம்பரசன்

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

Leave a Comment